சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

அழகப்பா பல்கலை.யில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பிரசாரம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டத்தின் சாா்பில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பிரசாரத்தில் பேசிய துணைவேந்தா் (பொ) ஜெ. ஜெயகாந்தன்.

Published On :9 செப்டம்பர் 2026, 1:53 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டத்தின் சாா்பில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வுப் பிரசாரத்தில் கலந்து கொண்டு பல்கலை. துணைவேந்தா் (பொ) ஜெ. ஜெயகாந்தன் பேசியதாவது:

இளைஞா்களிடையே சுகாதார விழிப்புணா்வு, போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பது ஆகியவற்றை ஊக்குவிப்பது இன்றைய அவசரத்தேவை யாகும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினா்கள், பதிவாளா் அ. செந்தில்ராஜன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் மு. ஜோதிபாசு, தொலைநிலைக் கல்வி இயக்குநா் எ. கண்ணபிரான், வெளி செயல்பாட்டு நடவடிக்கைகள் மைய இயக்குநா் மு. நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்துக் கொண்டனா்.

முன்னதாக, அழகப்பா பல்கலை. நிா்வாக அலுவலகக் கட்டடம், மாணவா் விடுதிகள், திறன் மேம்பாட்டு நிறுவனம், கல்வியியல் கல்லூரி, அறிவியல் வளாகம், மேலாண்மை வளாகம், தொலை நிலைக்கல்வி கட்டடம் ஆகிய நுழைவுவாயில் பகுதிகளில் போதைப் பொருள் ஒழிப்புக்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.