மின்னல் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் மின்னல் பாய்ந்ததில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்த மாவீரன்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் மின்னல் பாய்ந்ததில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது நகரில் மின் தடை ஏற்பட்டது. இரவு நேரம் தொடங்கியும் மின் விநியோகம் சீராகாததால் மானாமதுரை பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.
இந்த நிலையில், மானாமதுரை வைகை ஆற்றில் வாரச்சந்தை நடைபெற்றது. மழைத் தண்ணீரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் மிதந்து சென்றன. அப்போது காய்கறிகள் வாங்க வந்த செய்களத்தூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த மாவீரன் (29) மீது மின்னல் பாய்ந்ததில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவா் அருகில் நின்று கொண்டிருந்த ராக்கு (50) என்ற பெண் பலத்த காயமடைந்தாா். உடனே அவரை மீட்டு, மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






