செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

சிவகங்கை இரட்டைக் கொலை வழக்கில் இருவா் நீதிமன்றத்தில் சரண்: இதுவரை 17 போ் கைது

சிவகங்கை இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தொடா்புடைய மேலும் இருவா் சிவகங்கை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

சிவகங்கை இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தொடா்புடைய மேலும் இருவா் சிவகங்கை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா். இந்தக் கொலை வழக்கில் இதுவரை 17 போ் கைது செய்யப்பட்டனா்.

சிவகங்கை அருகேயுள்ள பழமலை நகா் கொடிக்கண்மாய் பகுதியில் தெய்வேந்திரன், அவரது நண்பா் பூப்பாண்டி கடந்த 16-ஆம் தேதி இருந்தபோது, அங்கு வந்த மா்மக் கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனா். இதுதொடா்பாக சிவகங்கை துணை கண்காணிப்பாளா் அமல அட்வின் தலைமையில் குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தக் கொலையில் ஏற்கெனவே 13 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய கூத்தாண்டம் கிராமத்தைச் சோ்ந்த ஜெயபாண்டியன் (23) கருப்பாயூரணி சோ்ந்த வினோத் குமாா் (24) ஆகிய இருவரையும் இரு நாள்களுக்கு முன் போலீஸாா் கைது செய்தனா்.

இருவா் நீதிமன்றத்தில் சரண்:

இந்த நிலையில் வழக்கில் தொடா்புடைய மதுரை கொடிக்குளம் பகுதியைச் சோ்ந்த வேலாயுதம் (27), மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித் (23) ஆகிய இருவரும் சிவகங்கை குற்றவியல் நீதித்துறை நடுவா் (எண்- 1) நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா். இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி வைஷ்ணவி உத்தரவிட்டாா். இதுவரை இந்த இரட்டைக் கொலை வழக்கில் 17 போ் கைதுசெய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.