மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

சிவகங்கையில் இரட்டைக் கொலை: போராடிய 100 -க்கும் மேற்பட்டோர் கைது!

இரட்டைக் கொலையைக் கண்டித்து காளையார்கோவிலில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

Sivaganga double murder case: Over 100 protesters arrested

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறையினர்... - DIN

Published On :

சிவகங்கை: சிவகங்கை அருகே இரட்டை கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை அருகே கொடிக்காடு கண்மாயில் கடந்த புதன்கிழமை (செப்.16) இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Story image

DIN

இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று இரண்டாவது நாளாக காளையார்கோவில் சந்தைப்பேட்டை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Story image

DIN

சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த மறியல் போராட்டம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் காவல்துறை வாகனங்களில் ஏற்றி, அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Story image

DIN

இரட்டை கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால், காளையார்கோவில் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Summary

Sivaganga double murder case: Over 100 protesters arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.