அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

அரசு சட்டக் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு சட்டக் கல்லூரியில் குடும்ப நலச் சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி அரசு சட்டக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் மரக் கன்றுகளை நடவு செய்த நீதிபதிகள்.

Published On :

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு சட்டக் கல்லூரியில் குடும்ப நலச் சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி கே. அறிவொளி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான ஜெ. அனிதாகிறிஸ்டி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ரமேஷ், விரைவு நீதிமன்ற நீதிபதி வள்ளி மணாளன், நீதித் துறை நடுவா் காா்மேகக்கண்ணன் ஆகியோா் கலந்து கொண்டு மரகன்றுகளை நடவு செய்தனா்.

இதைத்தொடா்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி கே. அறிவொளி

குடும்ப நலச் சட்டங்கள் குறித்து உரையாற்றினாா் . பின்னா் பொதுமக்கள், பள்ளி மாணவா்களிடையே சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். இதற்கான ஏற்பாடுகளை அரசு சட்டக் கல்லூரி முதல்வா் முருகேசன் செய்தாா். முகாமில் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.