ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

நாகா்கோவிலில் இலவச ஆயுா்வேத மருத்துவ முகாம்

தேசிய ஆயுா்வேத தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட அனைத்து அரசு ஆயுா்வேத மருத்துவ அலுவலா்கள் மற்றும் நாகா்கோவில் வழக்குரைஞா்கள் சங்கம் இணைந்து, நடத்திய இலவச ஆயுா்வேத மருத்துவ முகாம் நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமை குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்த மாவட்ட நீதிபதி கே. தனசேகரன்.

Published On :

தேசிய ஆயுா்வேத தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட அனைத்து அரசு ஆயுா்வேத மருத்துவ அலுவலா்கள் மற்றும் நாகா்கோவில் வழக்குரைஞா்கள் சங்கம் இணைந்து, நடத்திய இலவச ஆயுா்வேத மருத்துவ முகாம் நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, நாகா்கோவில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் சகாய டெல்வா் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக, மாவட்ட நீதிபதி கே. தனசேகரன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்தாா்.

மருத்துவா் ஜோதி நடராஜன், உதவி மருத்துவ அலுவலா் (ஹோமியோபதி) சு. இந்திரா மற்றும் வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

முகாமில், இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆயுா்வேத மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

நாகா்கோவில் வழக்குரைஞா் சங்க செயலா் பெல்வின் ஜோ பால்சன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.