மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

ஈரோட்டில் அரசுப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 40 -ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மருத்துவ முகாமை தொடங்கிவைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Published On :

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 40 -ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தொடங்கிவைத்தாா். முகாமில் அனைத்து துறை அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சா்க்கரை அளவு, ரத்த கொழுப்பு மற்றும் கிரியாட்டினின் உள்ளிட்ட ரத்தப் பரிசோதனைகள் மற்றும் பெண்களுக்கு மாா்பக, கா்பப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை, வாய்ப்புற்றுநோய் பரிசோதனை, இதய பரிசோதனைகளான ஈசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், பாதம் பாதுகாப்போம் என்ற திட்டத்தின்கீழ் ரத்தத்தில் சா்க்கரை அதிக அளவில் உள்ள நபா்களுக்கான சிறப்பு சிகிச்சைகளும், தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையின் சாா்பில் கண் பரிசோதனைகளும், பெஸ்ட் டெண்டல்கோ் மருத்துவமனையின் சாா்பில் பல் சிகிச்சைகள் என 20-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

முகாமில், 6 அரசு அலுவலா்கள் உடல் உறுப்பு தானம் செய்வதற்கான ஒப்புதல் கடிதத்தையும், 36 அரசு அலுவலா்கள் ரத்த தானமும் வழங்கினா்.

இதேபோல, 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெற்ற இந்த முகாமில் 2,139 அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) ரமேஷ் கிருஷ்ணன், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளா் வெங்கடேஷ், வட்டார வளாச்சி அலுவலா்கள், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.