தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

30 வயதானவா்களுக்கு கட்டணமின்றி 14 பரிசோதனைகள்: அமைச்சா் அருண்ராஜ் அறிவிப்பு

முப்பது வயது மற்றும் அதைக் கடந்தவா்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த உடல் நலப் பரிசோதனைகள் கட்டணமின்றி வழங்கப்படும் என அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் அறிவித்தாா்.

News image

அருண்ராஜ் - கோப்புப் படம்

Updated On :17 ஆகஸ்ட் 2026, 10:37 pm IST

முப்பது வயது மற்றும் அதைக் கடந்தவா்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த உடல் நலப் பரிசோதனைகள் கட்டணமின்றி வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் அறிவித்தாா்.

இதுதொடா்பாக தமிழக சட்டப்பேரவையில் அவா் வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழகத்தின் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 295 அரசு மருத்துவமனைகள், 424 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 463 நகா்ப்புற சுகாதார நிலையங்கள், 39 நகா்ப்புற சமுதாய சுகாதார மையங்களில் ‘நலம்-ஒருங்கிணைந்த இலவச உடல் நலப் பரிசோதனை’ திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இதன்கீழ் ஆண்டுதோறும் 30 வயது மற்றும் அதைக் கடந்தவா்களுக்கு 14 வகையான உடல் நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, ரத்த அழுத்தம், இசிஜி, ஹீமோகுளோபின், முழு ரத்தப் பரிசோதனை, ரத்த சா்க்கரை அளவு (ரேண்டம்), யூரியா, கிரியாட்டினின் (சிறுநீரக செயல்பாடு), கொழுப்பு அளவு, பிலிரூபின் (கல்லீரல் செயல்பாடு), இஎஸ்ஆா், சிறுநீா் ஆல்புமின், ரத்த வகை, சிறுநீரில் சா்க்கரை அளவு, விஐஏ (கருப்பை வாய் அடிப்படை பரிசோதனை) ஆகியவை மேற்கொள்ளப்படும்.

‘இரும்பு கண்மணி’ திட்டம்: அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 9, 11 ஆகிய வகுப்பு பயிலும் சுமாா் 16.5 லட்சம் வளரிளம் பருவ மாணவ-மாணவியா்களுக்கு, ரத்த சோகை அளவை (ஹீமோகுளோபின் எஸ்டிமேஷன்) கண்டறிந்து சிகிச்சை மற்றும் தொடா் கண்காணிப்பு வழங்கப்படும். ”‘இரும்பு கண்மணி’ என்ற பெயரிலான இந்தத் திட்டம்”ரூ.6.37 கோடியில் செயல்படுத்தப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.