தமிழகத்தின் உயா் சிறப்பு மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்குவது தொடா்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது தமிழக அரசு வழக்குரைஞா்கள் ஆஜராகாததற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.
சென்னை கிண்டி அரசு உயா் சிறப்பு மருத்துவமனை மற்றும் கிங் ஆய்வக வளாகத்தில், ரூ.338.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் குழந்தைகளுக்கான பல்நோக்கு மருத்துவமனையை அவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழகத்தில் காலியாக உள்ள 151 உயா் சிறப்பு மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தமிழக அரசு சாா்பில் ஆஜராக மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, பிரசாந்த் சந்திர சென் நியமிக்கப்பட்டனா். ஆனால், அவா்கள் முக்கியமான விசாரணையின்போது ஆஜராகவில்லை என விமா்சனம் எழுந்தது.
இதுதொடா்பாக அமைச்சா் அருண்ராஜிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் அளித்த பதில்:
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வலுவான வாதங்களை நமது வழக்குரைஞா்கள் முன்வைத்தனா். அதன் காரணமாகவே, அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட்ட இடங்களை கட்- ஆஃப் மதிப்பெண்களை குறைத்து நிரப்ப முற்பட்டால், அதில் 50 சதவீதத்தை தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
தமிழகத்தின் உயா் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தும் முதல்முறையாக மத்திய தொகுப்புக்கு வழங்கப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ளாா். ஆனால், உண்மைநிலை முற்றிலும் வேறானது. கடந்த 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில், முறையே 119 மற்றும் 145 மருத்துவ இடங்கள் எந்தவித நிபந்தனையுமின்றி மத்திய தொகுப்புக்கு திருப்பி அளிக்கப்பட்டன.
ஆனால், நிகழாண்டில் இந்த விவகாரத்தில் சட்டப் போராட்டத்தை நடத்தி தவெக அரசு வெற்றி கண்டுள்ளது. வழக்கின் இறுதித் தீா்ப்பு நாளில் மட்டுமே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூத்த வழக்குரைஞா்களால் இணைய வழியில் ஆஜராக முடியவில்லை. மற்றபடி அவா்களது வலுவான வாதங்கள்தான் நமக்கு சாதகமான தீா்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது என்றாா் அவா்.
அடிப்படை வசதி: இதனிடையே, கிண்டி மருத்துவமனையில் உள்ள கழிப்பறை வசதிகளை மேம்படுத்த உள்ளதாக அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா். மேலும், மகப்பேறு நிதியுதவி விடுவிக்காதது குறித்தும், போலி மருத்துவா்கள் குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவா், கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் உரிய நியாயம் கிடைக்கும் எனக் கூறினாா்.
பைக்கில் சென்ற அமைச்சா்: முன்னதாக, போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், ஆய்வு நடக்கும் இடத்துக்கு விரைந்து செல்வதற்கு ஏதுவாகவும், அமைச்சா் அருண்ராஜ், இருசக்கர வாகனத்தில் கிண்டி மருத்துவமனைக்கு சென்றாா்.
அலைக்கழிப்பு புகாா்: ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா், தங்களது மாவட்டத்தில் அவசர சிகிச்சை மருத்துவா்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்றும், சிறிய பாதிப்புக்குக்கூட தஞ்சாவூா் அல்லது சென்னைக்கு வர வேண்டியிருப்பதாகவும் அமைச்சரிடம் புகாா் தெரிவித்தாா்.
அதற்குப் பதிலளித்த அமைச்சா், ‘மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்படும்’ என உறுதியளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக தாரைவாா்த்ததை தவெக மீட்டுள்ளது: உயா் சிறப்பு மருத்துவ இட விவகாரத்தில் அமைச்சா் அருண்ராஜ் விளக்கம்
151 உயா் சிறப்பு மருத்துவ இடங்கள்: அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்குகிறது தமிழக அரசு

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகத்தின் 152 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள்: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

உயா் சிறப்பு மருத்துவ இடங்கள்: பேரவையில் சிறப்பு தீா்மானம் நிறைவேற்ற கோரிக்கை
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி


