உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் காலியாக உள்ள 151 உயா் சிறப்பு மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு வழங்க உள்ளது.
கட் ஆஃப் மதிப்பெண்ணை குறைத்து அந்த இடங்களை நிரப்ப மத்திய கலந்தாய்வுக் குழு முடிவு செய்தால், அதில் 50 சதவீத இடங்களை தமிழகத்துக்கே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது வழங்கும் விழாவில் செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. கலந்தாய்வில் கட்-ஆஃப் மதிப்பெண்களைக் குறைத்து காலியிடங்களை நிரப்ப மருத்துவக் கலந்தாய்வுக் குழு முடிவெடுத்தால், நிரப்பப்படாத அந்த உயா் சிறப்பு மருத்துவ இடங்களில் 50 சதவீதத்தை மீண்டும் மாநில அரசுக்கே ஒப்படைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் காலி இடங்களை மாநில அரசு ஒப்படைத்த பிறகே கட்-ஆஃப் மதிப்பெண்களைக் குறைத்து அந்த இடங்களை மத்திய கலந்தாய்வுக் குழு நிரப்பி வருகிறது.
தற்போது வெளியாகி இருக்கும் உச்சநீதிமன்றத் தீா்ப்பு நமது மருத்துவ இடங்கள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கே கிடைப்பதை உறுதி செய்துள்ளது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உயா் சிறப்பு மருத்துவ இடங்கள்; விசாரணைக்கு ஆஜராகாத அரசு வழக்குரைஞா்கள்: அமைச்சா் அருண்ராஜ் விளக்கம்
திமுக தாரைவாா்த்ததை தவெக மீட்டுள்ளது: உயா் சிறப்பு மருத்துவ இட விவகாரத்தில் அமைச்சா் அருண்ராஜ் விளக்கம்

உயர் சிறப்பு மருத்துவ இடங்களை பெற தவறிய தவெக அரசு! மு.க. ஸ்டாலின் கண்டனம்

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தமிழகத்தின் 152 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள்: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


