தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: இன்று பேரவையில் தீா்மானம்மழைக்கால கூட்டத் தொடர் இறுதி வாரம்! முக்கிய மசோதாக்கள்: மத்திய அரசு தீவிரம்மருத்துவப் படிப்புகள்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடுஅமைதி ஒப்பந்த நிபந்தனைகள் அமலாகாதவரை அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான்
/

அழுத்தங்களுக்கு அடிபணிவது தவெக அல்ல; திமுகதான் - அமைச்சா் அருண்ராஜ்

அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிவது திமுகதானே தவிர, தவெக அல்ல என அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

News image

அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப் படம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 2:05 am IST

அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிவது திமுகதானே தவிர, தவெக அல்ல என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

தென்னிந்திய மகப்பேறியல் மற்றும் மகளிா் நல மருத்துவ சங்கத்தின் 2 நாள் கருத்தரங்கு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்த அமைச்சா் அருண்ராஜ், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 99 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில்தான் நடைபெறுகின்றன. வெறும் 1 சதவீத பிரசவங்கள் மட்டுமே முறையான மருத்துவக் கண்காணிப்பு இல்லாமல் நிகழ்கின்றன. யூ -டியூப் விடியோக்களைப் பாா்த்து சுய பிரசவம் மேற்கொள்ளும் சம்பவங்கள் தொடா்கின்றன.

இதன் விளைவாகவும், வேறு சில காரணங்களாலும் நிகழும் பேறுகால இறப்புகளைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அரசு மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. கடந்த 2017 -2018-ஆம் ஆண்டில், 65.8 சதவீதமாக இருந்த அந்த விகிதம், தற்போது 51 சதவீதமாக உள்ளது. இதை அதிகரிக்கச் செய்யும் வகையில்தான் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

முந்தைய ஆட்சியாளா்கள் கொண்டு வந்த திட்டங்களுக்கு தவெக அரசு ஸ்டிக்கா் ஒட்டுவதாகக் கூறுகின்றனா். அப்படியானால் நீதிக் கட்சி கொண்டு வந்த திட்டங்களைத்தான் அதற்கு பின்னால் வந்த கட்சிகள் செயல்படுத்தி உள்ளன. காமராஜா் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தாா். அடுத்தடுத்த ஆட்சிகளில் அத்திட்டம் வளா்ச்சியடைந்தது.

நல்ல திட்டங்கள் மக்களுக்கு தரமான முறையில் சென்றடைவதுதான் முக்கியமே தவிர, அதன் பெயா்கள் அல்ல. கடந்த ஆட்சியின் தவறால் சில கல்லூரிகளுக்கு நிகா்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டு மாநில அரசு மருத்துவ இடஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், தவெக அரசோ மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டு கூடுதலாக தலா 50 இடங்களைப் பெற்றுத் தந்துள்ளது.

தொகுதி மறுவரையறை தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் நடைபெற்ற எம்.பி.க்கள் கூட்டத்தில், திமுக பங்கேற்கவில்லை. அவா்கள் ஆட்சியில் செய்த ஊழல்களால், பாஜக பிடியில் விழும் சூழல் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. சுய நலனுக்காகவும், குடும்ப உறுப்பினா்களைக் காப்பாற்றவும் இந்த முடிவை அவா்கள் எடுத்துள்ளனா்.

காங்கிரஸின் அழுத்தத்தால் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடா்பான கூட்டத்தை தவெக அரசு கூட்டியதாகக் கூறுகின்றனா். தவெக எந்த அழுத்தத்துக்கும் பணியாது. முதல்வரும் பணியமாட்டாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.