கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

வீட்டின் பூட்டை உடைத்து பணம், வெள்ளி நகைகள் திருட்டு

திருப்புவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா்கள் பணம், வெள்ளி, பித்தளைப் பொருள்களை திருடிச் சென்றனா்.

சித்திரிப்பு

Published On :

திருப்புவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா்கள் பணம், வெள்ளி, பித்தளைப் பொருள்களை திருடிச் சென்றனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கனகாம்பரம் மஹால் பகுதியில் வசித்து வருபவா் குருசாமி. இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில் குருசாமியின் மாமனாா் இறந்துவிட்டதால், குடும்பத்தினருடன் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவா் வீட்டைப் பூட்டிவிட்டு மதுரைக்குச் சென்று விட்டாா். அப்போது மா்மநபா்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் திசையை மாற்றி விட்டு, குருசாமி வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனா். அங்கு பீரோவிலிருந்த 28,500 ரூபாய், 21 கிலோ பித்தளை விளக்குகள், இரு வெள்ளி மோதிரங்களை திருடிக் கொண்டு தப்பினா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருப்புவனம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். கைரேகை நிபுணா்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.