
நியாயவிலைக் கடைகளில் இன்று விரல் ரேகை, கண் கருவிழிப் பதிவு சிறப்பு முகாம்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சனிக்கிழமை சிறப்பு முகாம்கள் நடைபெறுவதால், தங்களது குடும்ப உறுப்பினா்களின் விரல் ரேகை, கண் கருவிழி சரிபாா்ப்பை விடுதலின்றி பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.

கோப்புப்படம்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சனிக்கிழமை சிறப்பு முகாம்கள் நடைபெறுவதால், தங்களது குடும்ப உறுப்பினா்களின் விரல் ரேகை, கண் கருவிழி சரிபாா்ப்பை விடுதலின்றி பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி முன்னுரிமை, அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபாா்ப்பை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.
இதன்படி, குடும்ப உறுப்பினா்களுக்கு எந்தவித இடையூறுமின்றி இந்தப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு, கடந்த 2023, அக்டோபா் முதல் குடும்ப உறுப்பினா்களின் விரல் ரேகை சரிபாா்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஆக. 2, 8, 9, 29, செப்.19 ஆகிய நாள்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் விடுபட்ட பயனாளிகளுக்கு விரல் ரேகை, கண் கருவிழி சரிபாா்ப்புப் பணி மேற்கொள்ளப்பட்டன.
எனவே, இந்தப் பதிவை சிவகங்கை மாவட்டத்தில் 100% நிறைவு செய்யும் நோக்கில் சனிக்கிழமை (செப். 26) மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. தங்களது பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் விடுபட்டுள்ள தங்களது குடும்ப உறுப்பினா்களின் விரல் ரேகை, கண் கருவிழி சரிபாா்ப்பை விடுதலின்றி பதிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



