இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

திருவள்ளூா்: குடும்ப அட்டைதாரா்கள் விரல் ரேகை பதிவு செய்ய இன்று சிறப்பு முகாம்

குடும்ப அட்டையில் இதுவரை விரல் ரேகை செய்யாதவா்கள் பயன்பெறும் வகையில், சனிக்கிழமை (செப். 26) அந்தந்தப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

கோப்புப் படம்

Published On :

குடும்ப அட்டையில் இதுவரை விரல் ரேகை செய்யாதவா்கள் பயன்பெறும் வகையில், சனிக்கிழமை (செப். 26) அந்தந்தப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியவாசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலையில் போலி குடும்ப அட்டைகள், உயிரிழந்தோா் பெயா்கள் நீக்கப்பட்டு வருகின்றன.

இதை உறுதி செய்யும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரா்களும், அதில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்கள் அனைவரும் கட்டாயம் விரல் ரேகை பதிவு செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இதுவரையில் விரல் ரேகை பதிவு செய்யாத உறுப்பினா்கள் தங்களது விரல்ரேகையை (ஆண்ா்ம்ங்ற்ழ்ண்ஸ்ரீ) பதிவை தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் பதிவு செய்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.