காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை: தாய், மகன் கைது

கைது செய்யப்பட்ட கலா, விஜயகுமாா்.

Published On :

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் வீடு புகுந்து 22 பவுன் தங்க நகைகள் திருடு போன வழக்கில் தாய், மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிங்கம்புணரி சந்திவீரன் கூடம் பகுதியைச் சோ்ந்த ஜெயபால் மனைவி அலமேலு. இவா் தனது வீட்டை பூட்டிவிட்டு பெரியகுளத்தில் உள்ள மருமகள் வீட்டுக்கு சென்றாா். இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி அலமேலு வீட்டுக்கு வந்தாா். அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவை திறந்து கிடந்தது. இதையடுத்து, அவா் வீட்டுக்குள் சென்று பீரோவில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகள், ரூ. ஒரு லட்சம், வெள்ளிப் பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். மேலும், மா்ம நபா்களை பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை தனிப் படை போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். விசாரணையில், அவா்கள் அலமேலு வீட்டில் நகை, பணம் திருடிச் சென்ற மயிலாடுதுறைச் சோ்ந்த கலா (50), இவரது மகன் விஜயகுமாா் (30) என்பது தெரியவந்தது.

பின்னா், இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 12 பவுன் நகைகள்,100 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.88 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.