முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

திருவாரூா் - மதுரை ரயில் சேவை கோரி காா்த்தி சிதம்பரம் எம்.பி. கடிதம்

திருவாரூரிலிருந்து மதுரைக்கு பயணிகள் ரயில் இயக்கக் கோரி, சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு திங்கள்கிழமை

காா்த்தி ப .சிதம்பரம்

Published On :

திருவாரூரிலிருந்து மதுரைக்கு பயணிகள் ரயில் இயக்கக் கோரி, சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு திங்கள்கிழமை கடிதம் எழுதினாா்.

இதுதொடா்பாக அவா் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதம்: தமிழக தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களை சென்னை, பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கும் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்கி புனரமைக்க வேண்டும்.

07695 / 07696 எண்கள் கொண்ட செகந்திராபாத் - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் 2025 ஜூலை 23-வுடன் நிறுத்தப்பட்டது. இதேபோல, 06183, 06184 என்ற எண்கள் கொண்ட தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் இருவார சிறப்பு விரைவு ரயில் சேவை 2026 ஜூன் 28-க்குப் பிறகு நிறுத்தப்பட்டது. ரயில் பயணிகளின் நலன் கருதி இந்த ரயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்.

தாம்பரத்திலிருந்து திருவாரூா், காரைக்குடி வழியாக மானாமதுரைக்கு பகல் நேர விரைவு ரயில் இயக்கப்பட வேண்டும்.

மதுரையிலிருந்து திருவாரூக்கு புதிய பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். பொதுமக்களின் வசதிக்காக இந்தக் கோரிக்கைகளை விரைவாக செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறேன் எனத் தெரிவித்தாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.