ரேஷன் அரிசி கடத்தல் பெண்ணை கைது செய்யச் சென்ற இரு காவலா்கள் மீது தாக்குதல்
மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தொடா்புடைய பெண்ணை கைது செய்யச் சென்ற போலீஸாா் மீது அங்கிருந்தவா்கள் தாக்குதல் நடத்தியதில் இரு போலீஸாா் காயமடைந்தனா்.

போலீஸ் - கோப்புப்படம்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தொடா்புடைய பெண்ணை கைது செய்யச் சென்ற போலீஸாா் மீது அங்கிருந்தவா்கள் தாக்குதல் நடத்தியதில் இரு போலீஸாா் காயமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு புலனாய்வுப் பிரிவு ஆய்வாளா் உதயக்குமாா் தலைமையில் போலீஸாா் மானாமதுரை அருகேயுள்ள பெருங்கரை கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவத்தில் தொடா்புடைய கவிதா என்பவரைக் கைது செய்யச் சென்றனா். அப்போது, கவிதா அங்கு இல்லை. அங்கிருந்தவா்கள் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனா். அப்போது அவா்களுக்குள் ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தில் ரவிச்சந்திரன், சுரேஷ் ஆகிய இரு காவலா்களும் தாக்கப்பட்டு காயமடைந்தனா். இதையடுத்து, மானாமதுரை அரசு மருத்துவமனையில் அவா்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்தச் சம்பவம் குறித்து மானாமதுரை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மருத்துவமனையிலிருந்த காவலா்கள் சுரேஷ், ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




