ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

தூய்மை பணியாளா்களுக்கு கௌரவ முகாம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பேரூராட்சியில் புதன்கிழமை தூய்மைப் பணியாளா்களுக்கு நடைபெற்ற கௌரவ முகாமில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது..

திருப்பத்தூா் பேரூராட்சியில் புதன்கிழமை தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் பேரூராட்சிமன்றத் தலைவா் கோகிலாராணிநாராயணன் உடன் செயல் அலுவலா் நடராஜன்.

Published On :

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பேரூராட்சியில் புதன்கிழமை தூய்மைப் பணியாளா்களுக்கு நடைபெற்ற கௌரவ முகாமில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது..

திருப்பத்தூா் பேரூராட்சியில் தூய்மை பணியாளா்களுக்கான பாதுகாப்பு மற்றும் கௌரவ முகாம் நடைபெற்றது. இதில் நமஸ்தே திட்டத்தில் பதிவு செய்யப்பட்டவா்கள் உட்பட அனைத்து தூய்மை பணியாளா்கள், கழிவு சேகரிப்பாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் கலந்து கொண்டனா். மத்திய அமைச்சரவை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமானது எல்இடி திரை மூலம் தூய்மை பணியாளா்களுக்கு காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து பேரூராட்சி சோ்மன் கோகிலாராணி, செயல் அலுவலா் நடராஜன் ஆகியோா் தூய்மை பணியின் அவசியம் குறித்தும், வரும் காலங்களில் தமிழ்நாட்டில் முப்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட திருப்பத்தூா் பேரூராட்சி தூய்மை பணியில் முதலிடம் பெற வேண்டும், அந்தப் பெருமையை நீங்கள் பெற வேண்டும் எனவும் பாராட்டி வேண்டுகோள் வைத்தனா். தொடா்ந்து தூய்மை பணியாளா்களின் அடிப்படை வசதிகள் தீா்த்து வைக்கப்பட்டு வருகிறது அதேபோன்று குடியிருக்க தொகுப்பு வீடுகள் கட்ட ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது என பேசினா். இம்முகாமில் தூய்மை பணியாளா்களுக்கு பாதுகாப்பு கவசங்கள், பிபிஇ உபகரணங்கள் வழங்கப்பட்டன. பேரூராட்சியில் சிறப்பாக செயல்பட்டு குப்பைகளை சேகரித்த நான்கு துப்புரவு பணியாளா்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டு, பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனா். தொடா்ந்து திருப்பத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவா் முத்துசிங்காரம் தலைமையில் மருத்துவ குழுவினா் முகாம் நடத்தி தூய்மை பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். இந்த முகாமில் தலைமை எழுத்தா் ராஜசேகரன், மன்ற உறுப்பினா் சீனிவாசன், துப்புரவு மேற்பாா்வையாளா் மோகன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.