உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

பெரியகுளத்தில் நகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

Updated On :13 மே 2013, 12:22 am IST

பெரியகுளத்தில் நகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

 நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி ஆணையின் பேரில் 22 மற்றும் 26 ஆகிய வார்டுகளில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுகாதார அலுவலர் ஜெயராமன், சுகாதார ஆய்வாளர் டி.ஜெயசீலன் ஆகியோர் மேற்பார்வையில் சுகாதாரப் பணியாளர்கள் இப் பணியில் ஈடுபட்டனர்.

 வார்டுகளில் தெருக்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் சேமித்து வைத்துள்ள சின்டெக்ஸ் தொட்டி, சிமிண்ட் தொட்டி, பிளாஸ்டிக் டிரம், ஆட்டு உரல், குளிர் சாதன பெட்டி மற்றும் பிளாஸ்டிக் வாளிகள் ஆகியனவற்றை ஆய்வு செய்து அபேட் மருந்து தெளிக்கப்பட்டது.

   தேவையற்ற உடைந்த பாட்டில்கள், பிளாஸ்டிக் பக்கெட்டுகள், தேங்காய் சிரட்டைகள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் டயர்கள் ஆகியனவற்றை அப்புறப்படுத்துமாறும் பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்குமாறும், காய்ச்சல் கண்டவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆணையர் ஆர்.மகேஸ்வரி தெருக்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.