ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் சேர்க்க பளியர் இன பழங்குடியினர் கோரிக்கை

ஆண்டிபட்டி வட்டாரம், உப்புத்துறை பகுதியில் குடியிருந்து வரும் பளியர் இன பழங்குடியினர், தங்களை தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்த்து வேலை வழங்க வேண்டும் என்று திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் மனு அளித்தனர்.

Updated On :

ஆண்டிபட்டி வட்டாரம், உப்புத்துறை பகுதியில் குடியிருந்து வரும் பளியர் இன பழங்குடியினர், தங்களை தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்த்து வேலை வழங்க வேண்டும் என்று திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் மனு அளித்தனர்.

 கரட்டுப்பட்டி காலனியைச் சேர்ந்த வேலு தலைமையில் 25-க்கும் மேற்பட்ட பளியர் இன மக்கள் திங்கள்கிழமை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

 அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஜே.ஜே.காலனி, கரட்டுப்பட்டி காலனி பகுதியில் அரசு சார்பில் பளியர் இன மக்களுக்கு கட்டித் தரப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, தெரு விளக்கு ஆகிய வசதிகளை செய்து தர வேண்டும்.

 கால்நடை வளர்ப்புக்கு கடனுதவி வழங்க வேண்டும். முத்தாலம்பாறை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் எங்களை பயனாளிகளாக சேர்த்து வேலை மற்றும் சம்பளம் வழங்க வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.