தேனி அருகே திருமணத்தைப் பதிவு செய்ய கணவர் மறுப்பதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ. மகேஷிடம் மனைவி புகார் செய்துள்ளார்.
பழனிசெட்டிபட்டி, மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்தவர் பவுன்ராஜ் மகள் நாகலட்சுமி. இவரும், தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்த சுல்தான் மகன் அப்துல் ரஹீமும் காதலித்து, கடந்த 2014 இல் திருமணம் செய்துகொண்டனர்.
தற்போது, பழனிசெட்டிபட்டியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், திருமணத்தை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று, அப்துல் ரஹீமிடம் நாகலட்சுமி தொடர்ந்து கூறி வந்துள்ளார். ஆனால், அப்துல் ரஹீம் மறுத்து வந்தாராம். எனவே, இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் நாகலட்சுமி புகார் அளித்தார்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில், இந்தப் புகாரின் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

