இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

தேவாரம் அருகே லாரிகளில் வந்த விலையில்லா பொருள்கள் பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, தேவாரம் அருகே வெள்ளிக்கிழமை இரவு மினி லாரிகளில் கொண்டு வரப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Published On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, தேவாரம் அருகே வெள்ளிக்கிழமை இரவு மினி லாரிகளில் கொண்டு வரப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

   தேவாரம் அருகே வெள்ளிக்கிழமை திமுக சார்பில் தெருமுனை பிரசாரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பிற்பகல் 3 மணியளவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்ததால், தெருமுனைப் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. எனவே, தி.மு.க.வினர் கோம்பை, உத்தமபாளையம் ஆகிய ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

   அப்போது, உத்தமபாளையத்திலிருந்து போடி நோக்கி வந்த 2 மினி லாரிகளில் தமிழக முதல்வர் ஜெயலலிதா படம் பொறித்த பொருள்களை ஏற்றிச்செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், தி.மு.க.வினர் அந்த லாரிகளை தேவாரம் அருகே மடக்கிப் பிடித்து, தேவாரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

   பின்னர், போலீஸார் லாரிகளை சோதனையிட்டதில், பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பேக் மற்றும் செருப்புகள் இருப்பது தெரியவந்தது.

   விசாரணையில், நடப்பு கல்வியாண்டுக்கு போடி ஜ.கா.நி. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பேக் மற்றும் செருப்புகள், உத்தமபாளையம் மாவட்டக் கல்வி அலுவலகத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

   இதையடுத்து, தேவாரம் காவல் நிலையத்துக்கு வந்த கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் என். ராமகிருஷ்ணன் தலைமையிலான தி.மு.க.வினர், உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர். சம்பவம் குறித்து, தேவாரம் போலீஸார் கம்பம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜையாவுக்கு தகவல் அளித்ததன்பேரில், அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.