ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பாரதி இலக்கிய பேரவை விழா

தேனி மாவட்டம் கம்பத்தில், பாரதி இலக்கிய பேரவை சார்பில் மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, சிவாஜிகணேசன் ஆகியோர் பிறந்த நாள் விழா மற்றும்

News image
Updated On :2 நவம்பர் 2017, 2:59 am

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில், பாரதி இலக்கிய பேரவை சார்பில் மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, சிவாஜிகணேசன் ஆகியோர் பிறந்த நாள் விழா மற்றும்  காமராஜர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரது நினைவு நாள் விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொன்காட்சிக்கண்ணன் தலைமை வகித்தார்.  கு.தர்மர், செந்தில்நாதன் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் இன்னிசை பட்டி மன்றம் மற்றும் உரைவீச்சு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 எம்.பி.முருகேசன் பட்டி மன்றத்தை தொடக்கி வைத்தார்.  நடிகர் சிவாஜிகணேசன் படங்களுக்கு மெருகூட்டியது நடிப்பும் வசனமுமே என்ற தலைப்பில் சங்கரலிங்கம், பஞ்சுராஜா ஆகியோரும், பாடலும், நடனமுமே என்ற தலைப்பில் துரைப்பாண்டியன், திருநாவுக்கரசு ஆகியோரும் பேசினர். நடிப்பும், வசனமும், பாடல் நடனம் என இரண்டுமே என்று நடுவர் பாரதன் தீர்ப்பு கூறினார்.
இன்று இவர்கள் ஏன் தேவை என்ற தலைப்பில் உரை வீச்சு நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முத்துக்குமரன் துவக்கி வைத்தார். காந்தியடிகளைப்பற்றி பிரதீப், லால்பகதூர் சாஸ்திரியைப்பற்றி வினோதினி, காமராஜரைப் பற்றி பூர்ணிமா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைப் பற்றி அங்கயற்கண்ணி ஆகியோர் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.