தேனியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
தேனியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் புதன்கிழமை பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தேனியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் புதன்கிழமை பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. பெ.செல்வேந்திரன், திமுக முன்னாள் மாவட்டச் செயலர் எல்.மூக்கையா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நா.ராமகிருஷ்ணன், எஸ்.லட்சுமணன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் முருகேசன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய பாஜக அரசின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்தும், கருப்பு பணத்தை மீட்க வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...