உத்தமபாளையம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட வேண்டும் என, பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.   
Updated on
1 min read

தேனி மாவட்டம், உத்தமபாளையம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட வேண்டும் என, பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.   
  உத்தமபாளையம் வழியாக திண்டுக்கல்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இது, கேரளத்தையும் தமிழகப் பகுதியையும் இணைக்கும் முக்கிய  சாலையாக உள்ளது. எனவே, தினமும் ஆயிரக்கணக்கான பேருந்து போக்குவரத்து மற்றும் வர்த்தக வாகனங்களின் போக்குவரத்து, உத்தமபாளையம் புறவழிச்சாலை சந்திப்பை கடந்து செல்கின்றன.
      இந்த சாலை சந்திப்பில், கம்பம், தேனி மற்றும் போடி மார்க்கத்தில் 3 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதனால்,  இந்த சாலைகளில்  24 மணிநேரமும் வாகனப் போக்குவரத்து இருக்கும்.  இப்பேருந்து நிறுத்தங்களிலிருந்து ஏராளமான அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் பேருந்துகளுக்காக காத்திருக்கின்றனர்.     இந்நிலையில், இந்தப் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை இல்லாததால், பயணிகள் வெயில் மற்றும் மழை காலங்களில் மிகவும் அவதிப்படுகின்றனர்.    எனவே, உத்தமபாளையம் புறவழிச்சாலையில்  பயணிகளுக்கான நிழற்குடை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com