வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

உத்தமபாளையத்தில் பைக்குகள் திருட்டு: 3 பேர் கைது

உத்தமபாளையத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 2:19 am

DIN

உத்தமபாளையத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
உத்தமபாளையத்தில் இந்திர நகர், மின்நகர் மற்றும் தேரடி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக 3 மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து திருடப்பட்டன. இதுகுறித்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீஸார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் புதன்கிழமை உத்தமபாளையம் காவல் நிலையம் முன் நடைபெற்ற வாகன சோதனையின் போது  திருடுபோனதாக கூறப்பட்ட இருசக்கர வாகனத்தை பிடித்தனர்.
இதுகுறித்து அதில் வந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
 அப்போது அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த மார்டின் மகன் பிரசாந்த் (23), உத்தமபாளையம் கோட்டை மேட்டை சேர்ந்த அப்பாஸ்  மந்திரி மகன் அமீர்கான் (23) மற்றும்  பாறைமேட்டை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் பிரவின்குமார் (22) ஆகிய மூவரும் இணைந்து அந்த 3 இருசக்கர வாகனங்ளையும் திருடியது தெரியவந்தது.
 இதனை அடுத்து அந்த 3 வாகனங்களையும் மீட்ட போலீஸார்,  அவர்கள்  3 பேரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.