தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டையில் சேதமடைந்து உள்ள சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சின்னமனூர், உத்தமபாளையம், குச்சனூர் மற்றும் போடி ஆகிய நான்கு வழிகளில் இருந்து வரும் பேருந்துகள் மார்க்கையன்கோட்டை பேரூராட்சி வழியாக கடந்து செல்கிறன. இப்பகுதியில் நாள்தோறும் அதிகளவில் பயணிகள் பேருந்து, சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும், குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோயிலுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. எனவே தேனி உள்பட பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கும் முக்கிய வழித்தடமாகவும் இச் சாலை உள்ளது. இந்நிலையில், சின்னமனூர் - போடி இடையே செல்லும் நெடுஞ்சாலையானது குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது பெரிய பள்ளங்களாக மாறி கற்கள் பெயர்ந்து சாலையிலேயே சிதறி கிடக்கிறன.
இதனால் அவ்வழியாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
அதேபோல, இலகு ரக வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி பழுதாகி விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, பல மாதங்களாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சின்னமனூர் - போடி நெடுஞ்சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


