தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மார்க்கையன்கோட்டையில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டையில் சேதமடைந்து உள்ள சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:16 am IST

தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டையில் சேதமடைந்து உள்ள சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சின்னமனூர், உத்தமபாளையம், குச்சனூர் மற்றும் போடி ஆகிய நான்கு  வழிகளில் இருந்து வரும் பேருந்துகள் மார்க்கையன்கோட்டை பேரூராட்சி வழியாக கடந்து செல்கிறன.  இப்பகுதியில் நாள்தோறும் அதிகளவில் பயணிகள் பேருந்து, சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள்  சென்று  வருகின்றன. 
மேலும்,  குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோயிலுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. எனவே தேனி உள்பட பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கும் முக்கிய வழித்தடமாகவும் இச் சாலை  உள்ளது.   இந்நிலையில்,  சின்னமனூர் - போடி இடையே செல்லும்  நெடுஞ்சாலையானது   குண்டும் குழியுமாக  காட்சியளிக்கிறது. தற்போது  பெரிய பள்ளங்களாக மாறி கற்கள் பெயர்ந்து சாலையிலேயே சிதறி கிடக்கிறன. 
இதனால் அவ்வழியாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. 
அதேபோல, இலகு ரக வாகனங்கள்  பள்ளத்தில் சிக்கி  பழுதாகி விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, பல மாதங்களாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சின்னமனூர் - போடி நெடுஞ்சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என  அப்பகுதி  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.