போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கபெருமாள் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா

ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கபெருமாள் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழாவினையொட்டி திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:58 pm

DIN

ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கபெருமாள் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழாவினையொட்டி திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
இக்கோயிலில் கடந்த ஏப். 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதன் பின் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏப். 27 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. தேர்த் திருவிழாவையொட்டி ஏப். 29 ஆம் தேதி சுவாமி கோயிலில் இருந்து எழுந்தருளி தேரை வந்தடைந்தார். திங்கள்கிழமை (ஏப்.30) மாலை 5 மணிக்கு தேரில் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஜம்புலிபுத்தூரை சுற்றியுள்ள 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். புதன்கிழமை புஷ்ப பல்லாக்கு நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.