போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ஆண்டிபட்டியில் கழிவுநீர் கால்வாய் பாலத்தை சீரமைக்க கோரிக்கை

ஆண்டிபட்டியில் இடிந்து சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் மேல் அமைக்கப்பட்ட சிறு பாலம் இதுவரை சீரமைக்கப்படாததால்,  வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். 

Updated On :2 ஆகஸ்ட் 2018, 6:26 am IST

ஆண்டிபட்டியில் இடிந்து சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் மேல் அமைக்கப்பட்ட சிறு பாலம் இதுவரை சீரமைக்கப்படாததால்,  வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். 
     தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சியில் 12 ஆவது வார்டுக்கு உள்பட்ட பகுதியில் உள்ள சீனிவாசா நகர் தெருக்களில் குறுக்கிடும் கழிவுநீர் கால்வாய் மேல் சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 
 ஆனால், இந்த சிறு பாலங்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பே இடிந்து சேதமடைந்துவிட்டன. இதனால்,  தெருவின் நடுவில் பெரிய கழிவுநீர் கால்வாய் பள்ளத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் கார்கள் சென்று வர முடியாமல் சிக்கிக் கொள்கின்றன. இரவில், இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதும் தொடர் கதையாக உள்ளது. 
    எனவே, இந்த பாலத்தினை சீரமைக்க வேண்டும் என்று, இப்பகுதி மக்கள் கடந்த சில  ஆண்டுகளாகவே பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
     எனவே, நெருக்கமான குடியிருப்புகளைக் கொண்ட சீனிவாசா நகரில் சேதமடைந்துள்ள இந்த சிறு பாலங்களை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.