முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மீட்பு பயிற்சி

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பேரிடர் மீட்பு பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலக பணியாளர்களுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On :

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பேரிடர் மீட்பு பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலக பணியாளர்களுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஆட்சியர் அலுவலக பணியாளர்கள்  விழிப்புணர்வு குழு, அவசரகால எச்சரிக்கை குழு, வெளியேற்றுதல் குழு, தேடுதல் மற்றும் மீட்புக் குழு, முதலுதவிக் குழு, தீத் தடுப்புக் குழு, பாதுகாப்புக் குழு, போக்குவரத்து மேலாண்மைக் குழு, ஊடக மேலாண்மைக் குழு என்ற 9குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.
அவர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்படும் நிலையில்,  மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு, தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த பயிற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் பணியாளர்கள் பயிற்சி அளித்தனர். செயல் விளக்கப் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.