தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

ஆண்டிபட்டியில் பழக்கடைக்காரர் கொலை:  மனைவி, மகன், மகள் உள்பட 4 பேர் கைது

ஆண்டிபட்டியில் பழக்கடைக்காரரை கழுத்தறுத்து கொலை செய்து கிணற்றில் வீசியதாக அவரது மனைவி, மகன், மகள் உள்பட 4 பேரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர். 

Published On :

ஆண்டிபட்டியில் பழக்கடைக்காரரை கழுத்தறுத்து கொலை செய்து கிணற்றில் வீசியதாக அவரது மனைவி, மகன், மகள் உள்பட 4 பேரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர். 
ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தர நாடார் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (42). ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே பழக்கடை நடத்தி வந்தார். கடந்த ஆக.2 ஆம் தேதி  ஆண்டிபட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி கிராமத்தில் விவசாயி ஒருவரின் கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் முருகனின் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர். அழுகிய நிலையில் இருந்ததால் முதலில் அவர் யார் என தெரியாத நிலை இருந்தது.  
பின்னர் போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணயில்,  அவர் பழக்கடைக்காரர் என்பதும் மதுபோதையில் அவர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் அவரை மகனே கொலை செய்ததும் அதற்கு மனைவி,மகள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.    இதையடுத்து முருகனை கழுத்தை அறுத்துக்கொலை செய்து கிணற்றில் வீசியதாக அவரது மனைவி கலைச்செல்வி(35), 16 வயது மகன், மகள் மலர்(20), மகனின் 16 வயது  நண்பர்  ஆகியோரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து  போலீஸார் கூறியதாவது: பழக்கடை நடத்தி வந்த முருகன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். 
அவர் தினமும் பழக்கடையில் கிடைக்கும் பணத்தில் மது குடித்துவிட்டு, வீட்டிற்குச் சென்று மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 
இதனால் முருகனின் வீட்டில் உள்ளவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில்,  கடந்த மாதம் 31 ஆம் தேதி இரவு 10 மணியளவில் முருகன் அளவுக்கு அதிகமாக மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளார். அப்போது மகன், மகள் மலர் ஆகியோர் சண்டையை விலக்கி உள்ளனர். 
ஆனால் முருகன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டால் அவரை மகன் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். அதற்கு மனைவி மற்றும் மகள் உடந்தையாக இருந்துள்ளனர். கொலையை மறைப்பதற்காக தந்தையின் சடலத்தை மகன் தனது நண்பர்  உதவியுடன் மோட்டார் சைக்களில் கொண்டு சென்று  டி.வாடிப்பட்டியில் உள்ள தனியார் விவசாய கிணற்றில் வீசியுள்ளார். 
ஆண்டிபட்டி போலீஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் இது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 16 வயது மகன் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.