தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை காவல் துறையினரைக் கண்டித்து, வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலர் மணிக்குமார், மாநில துணைத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கை குறித்து சங்கத்தினர் கூறியது: பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்பிரிதா கடந்த ஆக.3-ம் தேதி தேனியில் இருந்து பெரியகுளம் நோக்கி அரசு வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அந்த வாகனத்தை பின்தொடர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபர், வருவாய் கோட்டாட்சியரின் வாகனத்தை முந்திச் செல்வதும், பின்தொடர்ந்து வருவதுமாக இருந்தாராம். இதையடுத்து கோட்டாட்சியரின் வாகனத்தில் சென்ற அலுவலக உதவியாளர் அன்பரசன், வாகனத்தில் இருந்து இறங்கி இருசக்கர வாகனத்தில் வந்தவரை தடுத்து நிறுத்தி கண்டித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கோட்டாட்சியர் வாகனத்தை பின் தொடர்ந்து வந்த நபர் தென்கரை காவல் நிலைய தலைமைக் காவலர் என்பதை விசாரித்து தெரிந்து கொண்ட அன்பரசன், இது குறித்து தென்கரை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றுள்ளார்.
ஆனால் புகார் குறித்து விசாரணை நடத்த தென்கரை காவல் நிலைய ஆய்வாளர் ஆர்வம் காட்டவில்லை. எனவே தென்கரை காவல் நிலைய தலைமைக் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

