தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி மாநிலத்தில் 2ஆவது தூய்மை நகராக தேர்வு பெற்றது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகராட்சி ஆணையாளர் ந.சங்கரன், இதற்கான சான்றிதழை தமிழக முதல்வரிடமிருந்து பெற்றார்.
ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு செய்த பல்வேறு சேவைகளுக்காக சிறந்த நகராட்சி தேர்வு செய்யப்பட்டு, தமிழக முதல்வரால் சான்றிதழ் வழங்கப்படும்.
அதன்படி, இந்த ஆண்டு, கம்பம் நகராட்சி நிர்வாகம், தமிழகத்திலேயே தூய்மையான நகராட்சிக்கான இரண்டாவது இடமும், சிறந்த நிதி நிர்வாகம், ஆளுமை ஆகியவற்றுக்காகவும் தேர்வு பெற்றது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இதற்கான விருதை கம்பம் நகராட்சி ஆணையர் ந.சங்கரனிடம் வழங்கினார்.