மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

அபுதாபியில் தொழில் தொடங்குவதாகக் கூறி ரூ.45.90 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு

பெரியகுளத்தைச் சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளரிடம் அபுதாபியில் கூட்டாக தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்து, ரூ.45.90 லட்சத்தை மோசடி

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

பெரியகுளத்தைச் சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளரிடம் அபுதாபியில் கூட்டாக தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்து, ரூ.45.90 லட்சத்தை மோசடி செய்ததாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது புதன்கிழமை இரவு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
பெரியகுளம், ஜெ.ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் அப்துல் ரசீத் மகன் முஸ்தபா.  இவர், பெரியகுளத்தில் ஜவுளிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இதே ஊரைச் சேர்ந்தவர் ஹபீப்ரகுமான் மகன் ரியாஜ்தீன். இவர் அபுதாபியில் வசித்து வருகிறார். 
ரியாஜ்தீன், முஸ்தபாவிடம் அபுதாபியில் கூட்டாக தொழில் தொடங்கலாம் என்று கூறி உடன்படிக்கை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கூட்டுத் தொழில் தொடங்குவதற்காக, முஸ்தாபாவிடமிருந்து ரியாஜ்தீன் கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டில்  பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.45.90 லட்சம் பெற்றுக் கொண்டதாகவும், இதற்கு ரியாஜ்தீன் மனைவி சர்மிளாபானு, மகன் ராஷீத் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், முஸ்தபாவை, ரியாஜ்தீன் அபுதாபிக்கு வரவழைத்து ரூ.10 லட்சம் வரை வீண் செலவு ஏற்படுத்தினாராம். இந்நிலையில், ரியாஜ்தீன் அபுதாபியில் தொழில் தொடங்காமலும், முஸ்தபாவிடம்  வாங்கிய பணத்தை திரும்பத் தராமலும் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 
தற்போது பெரியகுளத்திற்கு வந்துள்ள ரியாஜ்தீனிடம் இது குறித்து கேட்டதற்கு தன்னை தரக் குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரனிடம், முஸ்தபா புகார் அளித்தார். 
 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், ரியாஜ்தீன், சர்மிளாபானு, ராஷீத் ஆகியோர் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.