/
அரசு கேபிள் டிவி சேனல்களுக்கு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தேனி பங்களாமேடு திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் தமிழன் தலைமை வகித்தார். செயலர் ஆண்டவர், பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கேபிள் டிவி கட்டணச் சேனல்களுக்கு புதிய கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும், மத்திய அரசின் வரி விதிப்பை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









