தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

போடியில் போடி சேவா அறக்கட்டளை சார்பில்  நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:12 am

DIN

போடியில் போடி சேவா அறக்கட்டளை சார்பில்  நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
 போடியில், ஸ்ரீகாமராஜ் வித்யாலயா ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளியுடன் இணைந்து போடி சேவா அறக்கட்டளை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஸ்ரீகாமராஜ் வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு அப்பள்ளியின் முதல்வர் ஆர்.உஷா எல்லம்மாள் தலைமை வகித்தார். ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் ஆர்.செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
 போடி சேவா அறக்கட்டளை நிறுவனர் கலைச்செல்வி போட்டிகளை தொடக்கி வைத்தார். போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.  இதில் 9,10 ஆம் வகுப்பு மாணவர்கள் ரத்தினசாமி 35 குறள்களையும், தட்சிணாமூர்த்தி 32 குறள்களையும், சந்தோஷ் 28 குறள்களையும் ஒப்புவித்தனர்.
இதே போல்  8 ஆம் வகுப்பு மாணவிகள் அர்ச்சனா 73 குறள்களையும், ராம்பிரியா 56 குறள்களையும், பிருந்தாலட்சுமி 45 குறள்களையும் ஒப்புவித்தனர்.  5 ஆம் வகுப்பு மாணவி திவ்யாஸ்ரீ 76 குறள்களையும், மாணவர் செல்வதங்கம் 36 குறள்களையும், மாணவி பிருந்தா 35 குறள்களையும் ஒப்புவித்தனர்.
 இவர்களுக்கு எழுத்தாளர் முத்துவிஜயன் எழுதிய பால உதயம் சிறுவர் நாடக நூல் பரிசாக வழங்கப்பட்டது. ஆசிரியர் எஸ்.ராமர் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.