சுடுகாடு வசதி கோரி ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை, ஆதி திராவிடர் சமுதாய மக்களுக்கு சுடுகாடு வசதி செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை, ஆதி திராவிடர் சமுதாய மக்களுக்கு சுடுகாடு வசதி செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   கிராம வழிகாட்டும் குழுக்களின் கூட்டமைப்பு, தேன் சுடர் பெண்கள் இயக்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி வட்டாரம் தி.பொம்மிநாயக்கன்பட்டி, சின்னமலையாபுரம், கோத்தலூத்து, மேக்கிழார்பட்டி ஆதி திராவிடர் சமுதாயத்தினருக்கு சுடுகாடு மற்றும் சுடுகாடு பாதை வசதி செய்து தர வேண்டும், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் சுடுகாட்டில் நிழல் குடை வசதி செய்து தர வேண்டும், பிச்சம்பட்டி, 
ராமகிருஷ்ணாபுரம் ஆகிய 
கிராமங்களில் எரியூட்டுக் கொட்டகை, ஆழ்துளைக் கிணறு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர். 
தேன் சுடர் பெண்கள் இயக்கத் தலைவர் வி.கருத்தம்மாள் தலைமை வகித்தார். பின்னர், கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ஞானசேகரனிடம் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com