மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தெரு விளக்குகளை பராமரிக்க கோரிக்கை

ஆண்டிபட்டியில் தெரு விளக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :9 ஜூலை 2018, 2:19 am

ஆண்டிபட்டியில் தெரு விளக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆண்டிபட்டி பேரூராட்சிக்குள்பட்ட காமராஜர் நகர், ரயில்வே பீடர் சாலை, நாடார் தெரு, பாப்பம்மாள்புரம், சக்கம்பட்டி, குமராபுரம், சீனிவாசா நகர் ஆகிய பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.   இப்பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள் ஆங்காங்கே பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். இதைப் பயன்படுத்தி குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.    காமராஜர்நகர் பகுதியில் தெரு விளக்கு உடைந்து மின்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இது குறித்து மின்வாரிய ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  
   எனவே, தெரு விளக்குகளை சரிசெய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.