திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பெரியகுளம் கௌமாரியம்மன் கோயிலில்  ஆனித் திருவிழா கொடியேற்றம்

பெரியகுளம் கௌமாரியம்மன் திருக்கோயில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :9 ஜூலை 2018, 7:31 pm

DIN

பெரியகுளம் கௌமாரியம்மன் திருக்கோயில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
  இவ்விழாவினை முன்னிட்டு கடந்த ஜூலை 3 ஆம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.  திங்கள்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. 
  பின்னர் கோயில் எதிரேயுள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. அதன் கொடிகம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் வர்த்தக சங்க பிரமுகர் பி.சி.சிதம்பரசூரியவேலு, பல் மருத்துவர் கணேஷ் ,சிவா ஸ்டிடுயோ அய்யாச்சாமி, அதிமுக நிர்வாகி விடிஎஸ்.ராஜவேலு  மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 திருவிழாவினை முன்னிட்டு ஜூலை 9 ம் தேதி முதல் தினமும் மாலை 7 மணியளவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் நகர்வலம் வரும் நிகழ்சி நடைபெறுகிறது. மேலும் ஜூலை 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும், ஜூலை 18 ஆம் தேதி அக்னிச் சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.