சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

சுற்றுப்புறச்சூழலை காப்பது மாணவர்களின் கடமை: ஆட்சியர்

சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது மாணவர்களின் கடமை எனதேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.

Updated On :7 ஜூன் 2018, 7:05 am IST

சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது மாணவர்களின் கடமை எனதேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி சவரியப்ப உடையார் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, உலக சுற்றுச் சூழல் தின விழாவில் தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கலந்து கொண்டு பேசினார்.
தாளாளர் எம்.எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். 
விழாவில் ஆட்சியர் பேசியது: சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க வேண்டியது, மாணவ, மாணவியர்களின், தலையாய கடமையாகும், முதலில் தங்களது வீடுகள், தெருக்களில் இருந்து தொடங்க வேண்டும். பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களிடமிருந்து பணிகளை இன்றே தொடங்க வேண்டும், உலகிலேயே பெரிய விலங்கான திமிங்கலம் 20 பாலிதீன் பைகளை சாப்பிட்டால் இறக்கும் என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது  முதல் கடமை என்றார். 
பின்னர் அனைவரும் சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மரக்கன்றுகளை நட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.