தேனி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வரும் ஏப்.1-ம் தேதி முதல் பள்ளி செல்லாக் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்க உள்ளது.
இது குறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை கணக்கெடுத்து, அவர்கள் பள்ளிப் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி வரும் ஏப்.1-ம் தேதி தொடங்கி, மே மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 18 வயது வரை உள்ள பள்ளி செல்லாத, பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகளை கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவர் வருகை பதிவேட்டின் அடிப்படையிலும், கிராமங்களில் வீடு வீடாகச் சென்றும், தொழில் நிறுவனங்களுக்குச் சென்றும் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய, பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் கண்டறிப்படும் பள்ளி செல்லாக் குழந்தைகளை பள்ளிகள், அரசு மாணவர் விடுதிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர்த்து படிப்பை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

