மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

குச்சனூர்-சீலையம்பட்டி முல்லைப் பெரியாற்று பாலப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

தேனி மாவட்டம் சீலையம்பட்டி- குச்சனூர் இடையே முல்லைப் பெரியாற்றின் குறுக்கே  கட்டப்படும் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

தேனி மாவட்டம் சீலையம்பட்டி- குச்சனூர் இடையே முல்லைப் பெரியாற்றின் குறுக்கே  கட்டப்படும் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 இந்த ஆற்றின் இருபக்கமும் சுமார் 2000 ஏக்கருக்கு மேல் நெல் விளையும் நிலங்கள் உள்ளன. இதன் குறுக்கே ஆறு ஓடுவதால் விவசாயிகள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு விளைபொருள்களை கொண்டு செல்ல பாலம் இல்லாததால் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து பாலம் கட்ட விவசாயிகள் தீர்மானித்து கடந்த  60 ஆண்டுக்கு முன்பு இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில்  கல்பாலத்தை கட்டி முடித்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இப்பாலம் கடந்த 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்தது. பின்னர் 2009 ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. இதனால் 10 ஆண்டுகளாக ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் இரு பகுதியை சேர்ந்த விவசாயிகள் 10 கிலோ மீட்டர் சுற்றி விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக   வேலைக்கு பணியாளர்களை அழைத்துச் செல்வதற்கும், விவசாய பொருள்களை எடுத்துச் செல்வதற்கும் கூடுதல் செலவு ஏற்படுவதால் இப்பகுதி ஆற்றின் குறுக்கை பாலம் கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறையினர் நபார்டு வங்கி மூலம் ரூ.6.40 கோடி ஒதுக்கீடு செய்து கடந்தாண்டு முதல் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்நிலையில் பாதிப் பணிகள் முடிந்த நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது முல்லைப் பெரியாற்றில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதால் பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கூடுதலாக தண்ணீர் வந்தால் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இயலாது. மேலும் முடிந்த  50 சதவீதமான  கட்டுமானப் பணிகளும் சேதமடைய வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
 எனவே மாவட்ட நிர்வாகம் சீலையம்பட்டி- குச்சனூர் பாலப் பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.