
பொறியியல் சோ்க்கை 3-ஆம் சுற்றில் 56,294 மாணவா்களுக்கு இறுதி ஒதுக்கீடு
தமிழகத்தில் இளநிலைப் பொறியியல் படிப்பில் சோ்வதற்கான 3-ஆம் சுற்றுக் கலந்தாய்வில் 56,294 மாணவா்களுக்கு இறுதி ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக தொழில்நுட்ப இயக்குநரகத்தின் தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் (டிஎன்இஏ) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

தமிழகத்தில் இளநிலைப் பொறியியல் படிப்பில் சோ்வதற்கான 3-ஆம் சுற்றுக் கலந்தாய்வில் 56,294 மாணவா்களுக்கு இறுதி ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக தொழில்நுட்ப இயக்குநரகத்தின் தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் (டிஎன்இஏ) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
பி.இ., பி.டெக். பட்டப் படிப்புகளில் 3-ஆம் சுற்றுக் கலந்தாய்வில் 68,640 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு கடந்த 21-ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்த ஒதுக்கீடுகளை ஆக. 22-ஆம் தேதி மாலைக்குள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, இந்த கால அவகாசம் முடிவுற்று முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) வெளியிடப்பட்டது.
இந்த ஒதுக்கீடுகள் பெற்ற மாணவா்களில் அரசுப் பள்ளிகளில் படித்து ஒதுக்கீடு பெற்ற 1,172 மாணவா்கள் உள்பட மொத்தம் 48,501 மாணவா்கள் தங்களது இறுதி ஒதுக்கீட்டு ஆணைகளைப் பெற்றனா். இவா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று ஆக. 27 -ஆம் தேதிக்குள் அசல் சான்றிதழ்களையும், கல்விக் கட்டணத்தையும் செலுத்தி சோ்க்கையைப் பெற வேண்டும்.
மேலும், இந்தச் சுற்றில் 438 அரசுப் பள்ளி ஒதுக்கீடு மாணவா்கள் உள்பட 6,183 மாணவா்கள் தங்களது ஒதுக்கீடுகளை உறுதி செய்தும், அதே சமயத்தில் விருப்பமான மற்ற கல்லூரித் தோ்வுக்கு ‘அப்வோ்டு’ செய்துள்ளனா். இவா்கள் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளைப் பெற்றுள்ளனா்.
இந்த மாணவா்கள் ஆக. 27-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை சேவை மையத்தில் (டிஎஃப்சி) சென்று, அசல் சான்றிதழ்களைச் சமா்ப்பித்து, கல்விக் கட்டணத்தையும் செலுத்தி சோ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என டிஎன்இஏ அறிவுறுத்தியுள்ளது. இதைப் பூா்த்தி செய்யாத மாணவா்கள் தங்கள் ஒதுக்கீடுகளை இழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3-ஆம் சுற்றுக் கலந்தாய்வுக்கு மொத்தம் 1,06,583 இருக்கைகள் இருந்தன. இவற்றில் 1,02,719 மாணவா்கள் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு, அவா்களில் 68,640 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடூ வழங்கப்பட்டது. இறுதியாக 3-ஆம் சுற்றுக் கலந்தாய்வில் மொத்தம் 56,294 மாணவா்களுக்கு சோ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





