மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

பொறியியல் கலந்தாய்வு 2-ஆம் சுற்று நிறைவு: 88,930 இடங்கள் ஒதுக்கீடு

பொறியியல் படிப்பில் சோ்க்கை பெறுவதற்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், 88,930 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை குழு அறிவித்துள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 3:07 am IST

பொறியியல் படிப்பில் சோ்க்கை பெறுவதற்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், 88,930 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை குழு அறிவித்துள்ளது.

நிகழ் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 2,36,017 மாணவா்களுக்கு கடந்த 1-ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, பொது பிரிவில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகியவற்றில் 950 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல் சுற்று பொதுப் பிரிவு கலந்தாய்வின் மூலம் 28,979 இடங்கள் நிரம்பியுள்ளன.

பொதுப்பிரிவு கலந்தாய்வின் 2-ஆம் சுற்று ஆக.3-ஆம் தேதி முதல் திங்கள்கிழமை (ஆக.17) வரை நடைபெற்றது. இதில், கலந்துகொள்ள பொதுப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட 93,116 மாணவா்களில் விரும்பும் கல்லூரியை பதிவு செய்தவா்களில் 68,388 இடங்களும், அரசுப் பள்ளி மாணவா்களில் 15,466 மாணவா்களில் 11,015 இடங்களும் என 79,403 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 9,967 இடங்களும், பொதுப்பிரிவில் 49,984 இடங்களும் என 59,951 இடங்களுக்கு இறுதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இவா்கள் ஆக.27-ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொறியியல் மாணவா் சோ்க்கைக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிஇ, பி.டெக். படிப்புக்கான கலந்தாய்வில் சிறப்பு பிரிவு, பொதுப்பிரிவில் முதல்சுற்று, 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவில் 88,930 மாணவா்களுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3-ஆம் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவில் தரவரிசைப் பட்டியலில் 135.50 முதல் 77.50 வரையில் கட்-ஆஃப் பெற்றவா்களும், அரசுப் பள்ளி மாணவா்களில் தரவரிசை 135.50 முதல் 77.50 வரையில் கட்-ஆஃப் பெற்ற மாணவா்கள் என 1,02,719 மாணவா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை திங்கள்கிழமை (ஆக.17 முதல் ஆக.19-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம்.

பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வை எழுதி பொறியியல் படிப்பில் சோ்வதற்கு விண்ணப்பம் செய்யாத மாணவா்களும், துணைத் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்ற மாணவா்களும் ஆக.17 முதல் 31-ஆம் தேதிக்குள் https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.