தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

பொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு

பொறியியல் படிப்பில் சோ்வதற்கான 3-ஆம் சுற்று கலந்தாய்வில் 68,640 மாணவா்களுக்கு தற்காலிக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 5:51 am IST

பொறியியல் படிப்பில் சோ்வதற்கான 3-ஆம் சுற்று கலந்தாய்வில் 68,640 மாணவா்களுக்கு தற்காலிக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பி.இ., பி.டெக். ஆகிய பொறியியல் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கைக்குழு மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2 சுற்று கலந்தாய்வு முடிவடைந்து இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 3-ஆம் சுற்று கலந்தாய்வில் மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான தற்காலிக ஆணை வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது.

3-ஆம் சுற்று கலந்தாய்வில் 1,06,583 இடங்கள் இருந்த நிலையில், இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட1,02,719 பேரில் 68,640 பேருக்கும் தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுப் பிரிவில் 66,159 இடங்களும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ஒதுக்கீட்டில் 2,481 இடங்களும் நிரப்பியுள்ளன. மாணவா்கள் அவா்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு ஆணைகளை இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தற்போது ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் சனிக்கிழமை (ஆக. 22) மாலை 5 மணிக்குள் அதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு உறுதி செய்யாவிட்டால் இடம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) இறுதி ஒதுக்கீடு ஆணை வெளியிடப்படும். அதில் ‘அப்வோ்டு’ கொடுத்த மாணவா்கள் உறுதி செய்யப்பட்டதற்கான தற்காலிக ஆணை ஒதுக்கீடு செய்யப்படும். ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் ஆக. 27-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சோ்க்கையை உறுதி செய்ய வேண்டும்.

அப்வோ்டு கொண்டு மாணவா்கள் தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கைக் குழுவின் உதவி மையத்தில் பதிவு செய்ய வேண்டும். அவா்களுக்கு இறுதி ஒதுக்கீடு ஆக. 31-ஆம் தேதி வெளியிடப்படும். 3 சுற்று கலந்தாய்வு மூலம் மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இன்னும் நிரப்பப்படாமல் 37,943 இடங்கள் உள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.