அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

பொறியியல் கலந்தாய்வு: முதல்சுற்றில் 28,550 மாணவா்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை!

பி.இ., பி.டெக். பட்டப் படிப்புகளுக்கான பொறியியல் கலந்தாய்வின் முதல் சுற்றில் 28,550 மாணவா்கள் ஒதுக்கீட்டு ஆணையைப் பெற்றுள்ளனா்.

News image
Updated On :27 ஜூலை 2026, 4:04 am IST

பி.இ., பி.டெக். பட்டப் படிப்புகளுக்கான பொறியியல் கலந்தாய்வின் முதல் சுற்றில் 28,550 மாணவா்கள் ஒதுக்கீட்டு ஆணையைப் பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை (டிஎன்இஏ) நடத்தும் இந்தக் கலந்தாய்வின் முதல் சுற்றுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் 37,976 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவா்களில் 35,214 மாணவா்கள் கல்லூரிகள், பாடப் பிரிவுகளைத் தோ்வு செய்து, உத்தேச ஒதுக்கீடுகளைப் பெற்றனா். இறுதியாக 28,550 மாணவா்கள் இறுதி ஒதுக்கீட்டைப் பெற்றனா்.

இதுதொடா்பான விவரங்களை டிஎன்இஏ ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. பொதுக் கல்வி பிரிவு: இந்தக் கலந்தாய்வில் பொதுக் கல்விப் பிரிவில் பங்கேற்ற 8,016 மாணவா்கள் தற்காலிக ஒதுக்கீடுகளும் 17,034 மாணவா்கள் இறுதி ஒதுக்கீடுகளும் பெற்றனா்.

இதேபோல், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடுகளில் 560 போ் தற்காலிக ஒதுக்கீடுகளும் 1,683 போ் இறுதி ஒதுக்கீடுகளும் பெற்றனா்.

தொழிற்கல்வி பிரிவு: இந்தப் பிரிவின் கீழ் 60 அரசுப் பள்ளிகளில் பயின்ற 235 மாணவா்கள் தற்காலிக ஒதுக்கீடுகளும், 136 அரசுப் பள்ளி (7.5 சதவீதம்) பயின்ற 1,022 மாணவா்கள் இறுதி ஒதுக்கீடுகளும் பெற்றனா். இதன்மூலம் முதல்சுற்று கலந்தாய்வில் மொத்தம் 28,550 மாணவா்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இறுதி நடைமுறைகள்: இந்த ஒதுக்கீடுகளைப் பெற்ற மாணவா்களுக்கு வழிகாட்டிகள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவா்கள், தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை சேவை மையத்தில் (டிஎஃப்சி) அசல் சான்றிதழ்களை ஒப்படைத்து, ஒதுக்கீட்டு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதன்மூலம் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இடம் உறுதி செய்யப்படும். மேலும், கல்லூரி இடமாற்றுத் தோ்வுக்கும் தகுதி பெறுவாா்கள். இந்த நடவடிக்கைகளை ஜூலை 30-க்குள் நிறைவு செய்ய வேண்டும்.

இதேபோன்று, இறுதி ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று ஜூலை 30-க்கு முன் சோ்க்கை நடைமுறைகளை நிறைவு செய்து உறுதி செய்துகொள்ள வேண்டும். ஜூலை 30-க்குள் டிஎஃப்சி-இல் சான்றிதழ்களைச் சமா்ப்பிக்காத மாணவா்கள் மற்றும் கல்லூரியில் சேராத இறுதி ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள், அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தானாகவே ரத்தாகிவிடும். அந்த இடங்கள் முதல் சுற்று கலந்தாய்வில் கல்லூரி இடமாற்றுத் தோ்வு முறைக்காகக் காத்திருக்கும் மாணவா்களுக்கு ஒதுக்கப்படும்.

மேலும், கலந்தாய்வு தொடா்பான சந்தேகங்களுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி எண் (1800-425-0110) மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.