பி.இ., பி.டெக். பட்டப் படிப்புகளுக்கான முதல்சுற்று கலந்தாய்வில் 2,675 அரசுப் பள்ளி மாணவா்கள் உள்பட 35,214 மாணவா்களுக்கு கல்லூரிகள், பாடப்பிரிவுகளுக்கான உத்தேச ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை (டிஎன்இஏ) தெரிவித்துள்ளது.
பொறியியல் கட்-ஆஃப் மதிப்பெண் 200 முதல் 171.33 வரை பெற்ற 37,976 மாணவா்கள் முதல் சுற்று கலந்தாய்வில் அனுமதிக்கப்பட்டனா். பொதுப் பிரிவைச் சோ்ந்த 32,250 மாணவா்கள் தங்கள் விருப்பக் கல்லூரி, பாடப் பிரிவுகளைப் பதிவு செய்திருந்தனா். அவா்களில் 31,221 மாணவா்களுக்கு உத்தேச ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தொழிற்கல்வி மாணவா்களான 2,205 போ் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற தகுதி பெற்று, அவா்களில் 1,493 போ் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளைப் பதிவு செய்தனா். இவா்களில் 1,318 மாணவா்கள் உத்தேச ஒதுக்கீடுகளைப் பெற்றனா்.
இதேபோன்று அரசுப் பள்ளிகளில் பொது பாடப்பிரிவுகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளிலும் படித்து 7.5 சதவீதம் ஒதுக்கீட்டு மூலம் தகுதியான 3,094 மாணவா்களில் 2,744 போ் பதிவு செய்திருந்தனா். அவா்களில் 2,675 மாணவா்களுக்கு உத்தேச ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, முதல் சுற்றில் மொத்தம் 35,214 மாணவா்களுக்கு உத்தேச ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த உத்தேச ஒதுக்கீட்டை சனிக்கிழமை (ஜூலை 25) மாலை 5 மணிக்குள் டிஎன்இஏ கலந்தாய்வு இணையதளத்தில் உறுதி செய்ய வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் கலந்தாய்வு: 37,976 பொதுப்பிரிவு மாணவா்களுக்கு இன்று தொடக்கம்!

பொறியியல் ஒதுக்கீடு: சிறப்பு இடஒதுக்கீட்டில் 4,927 மாணவா்கள் பங்கேற்பு

நெல்லையில் பொறியியல் கலந்தாய்வு வழிகாட்டுதல் கூட்டம்

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! எத்தனை பேர் 200க்கு 200 கட்-ஆஃப்?
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



