செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆண்டிபட்டியில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி: ஒருவர் கைது

ஆண்டிபட்டியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :14 மே 2018, 7:13 pm

ஆண்டிபட்டியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஆண்டிபட்டி, தெற்குத்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. ஓவியர். இவருக்கு அதே பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் என்பவர் அரசியல் கட்சி சுவர் ஓவியம் வரைய வாய்ப்பு கொடுத்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பள்ளியில் ஓவியர் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ஆனந்த் கூறியுள்ளார்.
இதனை நம்பிய முனியாண்டி பல தவணைகளாக ரூ. 4 லட்சத்தை ஆனந்திடம் கொடுத்துள்ளார். ஆனால் ஆனந்த் வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் தராமல் இழுத்தடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் முனியாண்டி, ஆனந்த் வீட்டுக்குச் சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது அவரை ஆனந்த் மற்றும் அவரது மனைவி ஆனந்தி, மகள் அனிஸ்கா, மகன் ஜெயராமன் ஆகியோர் ஜாதியின் பெயரை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து முனியாண்டி ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்துள்ளார்.
அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து ஆனந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது மனைவி , மகள், மகன் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.