பெரியகுளம் அருகே காரால் மோதி ஓட்டுநர் கொலை
பெரியகுளம் அருகே கார் ஓட்டுநர்களிடையே ஏற்பட்ட மோதலில் காரால் மோதி கார் ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டார்.


பெரியகுளம் அருகே கார் ஓட்டுநர்களிடையே ஏற்பட்ட மோதலில் காரால் மோதி கார் ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டார்.
கொடைக்கானலைச் சேர்ந்தவர் ஆனந்தன் (22). கார் ஓட்டுநர். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கொடைக்கானலுக்கு காரில் சென்றார். அப்போது எதிரே சேலத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த கார் ஓட்டுநருக்கும் இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதுகுறித்து காட்ரோட்டில் உள்ள காவல் சோதனை சாவடியில் புகார் செய்யப்பட்டது. அப்போது ஆனந்த் சாலையில் நின்றிருந்த போது சேலம் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த காரின் ஓட்டுநர் ராஜபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் அதிவேகத்தில் காரை ஓட்டி வந்து ஆனந்த் மீது மோதினாராம்.
இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த முத்தரசன் மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநர் ராஜ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...